பணச் சிக்கலில் சிவகாசி ஜெயலட்சுமி
மதுரை:
போலீஸார் மீது சரமாரியாகப் புகார் கூறப் போய், தன் மீது பல்வேறு வழக்குகள் போடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளசிவகாசி ஜெயலட்சுமி மிகுந்த பணச் சிக்கலில் தவித்து வருகிறாராம்.
காவல்துறையின் லட்சணத்தைப் பாரீர் பாரீர் என்று அவர்கள் பட்டி தொட்டியெங்கும் பேசத் தொடங்கினர். ஜெயலட்சுமி கூறியபுகார்களை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. இங்குதான் பெரும் திருப்பம் ஏற்பட்டது.
சிபிஐ விசாரணையின் முடிவில், ஜெயலட்சுமி மீதே நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதவிர தாராபுரம், திண்டுக்கல்நீதிமன்றங்களிலும் ஜெயலட்சுமி மீது 2 வழக்குகள் போடப்பட்டன. புகார் கூறிய தன் மீதே வழக்குகள் திரும்பத் தொடங்கியதால்ஜெயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில்தான் அவருக்குப் பக்க பலமாக இருந்த வழக்கறிஞர் அழகர்சாமியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுஅடிதடியில் முடிந்தது. அழகர்சாமியும் தற்போது விலகிக் கொண்டு விட்டதால், வேறு வக்கீலை வைத்து தனது வழக்குகளைநடத்தி வருகிறார் ஜெயலட்சுமி.
அடிக்கடி வழக்குகளுக்காக பல்வேறு ஊர்களுக்கும் போக வேண்டியிருப்பதால், பணச் சிக்கல் ஏற்பட்டு தவித்து வருகிறாராம்ஜெயலட்சுமி. கையில் இருந்த பணம் மொத்தமும் வழக்குகளுக்காக ஏற்கனவே காலியாகி விட்ட நிலையில் அழகர்சாமியிடம்தான் பணத்தை கடன் வாங்கி செலவழித்து வந்தாராம் அவர்.
இப்போது பணம் இல்லாத காரணத்தால், தனக்கு பணம் தர பலரும் தயங்கும் காரணத்தால், போட்டிருக்கும் நகைகளை விற்றுக்காசாக்கி வருகிறாராம் ஜெயலட்சுமி. அதுதவிர தனது எல்லீஸ் நகர் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களையும் கூட அவர்விற்றும், அடகு வைத்தும் காசு தேற்றிக் கொண்டிருக்கிறாராம்.
இப்போதே இந்த நிலை என்றால் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, அதில் தீர்ப்புகள் வெளியாகி, அந்த தீர்ப்புகளை எதிர்த்துமேல் நீதிமன்றங்களுக்கு அப்பீல் என்று எதிர்தரப்பினர் போகத் தொடங்கினால் ஜெயலட்சுமி அதை எப்படி சமாளிக்கப் போகிறார்என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications