கரன்சிகளை வீசி ஜெயித்த ஜெ.: ஸ்டாலின் ஆவேசம்!
கோவை:
காமராஜர், எம்.ஜி.ஆர். போல ஜனநாயக மாண்புகளைக் காக்காமல், கரன்சி நோட்டுக்களை அள்ளி வீசி சட்டசபை இடைத்தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்துள்ளார் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது திருவண்ணாமலை தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட்ட காங்கிரஸ்வேட்பாளரின் பிரசாரப் பணிகளை காமராஜரே நேரடியாக மேற்கொண்டார். திமுக பிரசாரத்தை கருணாநிதி ஏற்றிருந்தார். அந்தத்தேர்தலில் திமுக வேட்பாளரே வெற்றி பெற்றார்.
கரன்சிகளை வீசி எறிந்து வெற்றியைப் பெற காமராஜர் நினைக்கவில்லை. மாறாக, ஜனநாயக மரபுப்படி செயல்பட்டார்.
அதேபோல, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, திண்டுக்கல் எம்.பி. தொகுதி இடைத் தேர்தல் வந்தது. அதில், அதிமுக வெற்றிபெற்றது. கரன்சிகளை வீசி எறிய கருணாநிதி நினைத்திருந்தால் அதில் அதிமுக வெற்றி பெற்றிருக்க முடியுமா?
இதேபோல, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மயிலாடுதுறை, அண்ணா நகர் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.இதில் திமுகவே இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். ஜனநாயக மாண்புகளைக் கட்டிக் காத்தார்.
ஆனால் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறேன் என்ற போர்வையில் கரன்சிகளைக்கொடுத்தும், அமைச்சர்களை தொகுதிகளிலேயே தங்க வைத்து பணத்தை அள்ளி இறைத்தும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்ஜெயலலிதா.
இப்படி ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் சட்டவிரோத ஆட்சி தமிழகத்தில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்காஜெயலலிதா செய்ததுதான் என்ன? சொன்னது எதையாவது அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா?
ஆட்சிக்கு வந்தபோது குடும்பத்துக்கு ஒரு வீடு என்றார்கள். நடந்ததா? எத்தனை குடும்பத்துக்கு அவர்கள் வீடுகொடுத்துள்ளார்கள் என்பதைக் கூற முடியுமா? ஆனால் ஒரே ஒருவருக்கு மட்டும் வீடு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்தான்ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவருக்கு மட்டும் 200 ஏக்கர் பரப்பளவில் அரண்மனை போன்ற வீட்டைக் கொடுத்துள்ளார்ஜெயலலிதா.
லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது இந்த அரசு, 10,000 சாலைப் பணியாளர்களை தவிக்க விட்டது இந்தஅரசு, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது இந்த அரசு.
திமுகவுக்கு வெற்றி, தோல்வி சகஜம். இந்தியாவில் திமுகவைப் போல் தோற்றவர்களும் இல்லை, வெற்றி பெற்றவர்களும்இல்லை. தோல்வி கண்டு துவள மாட்டோம், வெற்றி கண்டு ஆட மாட்டோம்.
அடிக்க அடிக்க மேலே எழும்பும் பந்து போலத்தான் திமுகவும். அதிமுகவின் சூழ்ச்சிகளை வென்று வெற்றி பெறுவோம் என்றார்ஸ்டாலின்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications