புதுவையில் நாளை தென் மாநில முதல்வர்கள் மாநாடு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம்,கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
ஆந்திர மாநிலம்சார்பில் உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி தலைமையிலான குழு கலந்து கொள்கிறது.
கர்நாடகம் சார்பில் அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் எம்.பி. பிரகாஷ் தலைமையிலான குழுவும், லட்சத்தீவு சார்பில் அதன்நிர்வாகியும் கலந்து கொள்கின்றனர். கேரள முதல்வர் இம்மாநட்டுக்கு வரவில்லை. அதேபோல, ஆந்திர, கர்நாடக மாநிலமுதல்வர்களும் கலந்து கொள்ளவில்லை. புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான குழு இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அண்ணாமலை ஹோட்டலில் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தென்மாநிலங்களில் நிலவும் நக்சலைட் பிரச்சினை, பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள், காவிரிப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்துவிவாதிக்கப்படவுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுவைக்குவருகிறார். அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் வருகை மற்றும் ஐந்து மாநில பிரதிநிதிகளின் வருகையையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications