இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வியாழக்கிழமை முதல் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வியாழக்கிழமை டெல்லி வரும் சந்திராக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர்நட்வர்சிங் உள்ளிட்ட தலைவர்களைசந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன. இந்திய, இலங்கை உறவு மேம்பாடு குறித்துமுக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.சுனாமி பாதித்த பகுதிகளில் இலங்கை அரசு நிவாரண உதவிககளை செய்யாமல் இருப்பதும், தமிழர்களின் பகுதிகளில்பொருளாதாரத் தடையை தொடர்ந்து அமல்படுத்தி வருவதையும் பல்வேறு உலக நாடுகள் கண்டித்துள்ளன. இதையடுத்து உலகஅளவிலான எதிர்ப்புக்குப் பணிந்து, சுனாமி நிவாரண நிதியை விடுதலைப் புலிகளுடன் பகிர்ந்து கொள்ள சந்திரிகா முடிவுசெய்துள்ளார்.
இத்தகைய பின்னணியில், சந்திரிகாவின் இந்திய வருகை முக்கியத்துவம் பெறுகிறது.