ஐஸ்லாந்தில் சாம்பார், வடை சாப்பிட்ட கலாம்!
ரெய்ஜாவிக்:
ஐஸ்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பெங்களூரைச் சேர்ந்த பெண்மணி தயாரித்தசாம்பார், வடையை சுவைத்து சாப்பிட்டார்.
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்ஜாவிக்கில், நார்வேக்கான இந்தியத் தூதர் மாஷெத் சச்தேவா, அப்துல் கலாமுக்கு இரவு விருந்துஅளித்தார். அந்த விருந்தில் அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்த தென்னிந்திய வகை உணவுகள் பரிமாறப்பட்டன. குறிப்பாகசாம்பாரும், வடையும்.
சந்திராவின் உணவு வகைககை ருசித்துச் சாப்பிட்ட கலாம், சாம்பார், வடையை மிகவும் அனுபவித்து ருசித்தார். பின்னர் நேராகசந்திரிகாவிடம் சென்று அவரைப் பாராட்டி, ஆசிர்வதித்தார். அப்போது கூடியிருந்த ஐஸ்லாந்து நாட்டு செய்தியாளர்கள், சாம்பார்வடை குறித்து கலாமிடம் கேட்டபோது, வடையை சாப்பிட்டுப் பாருங்கள், மிகவும் சுவையானது. அத்தோடு கொஞ்சம்சாம்பாரையும் சேர்த்துச் சாப்பிடுங்கள், மிகவும் அதை நேசிப்பீர்கள் என்று புன்னகையுடன் கூறினார்.
சந்திரிகா 10 ஆண்டுகளுக்கு முன்பே ஐஸ்லாந்து வந்து விட்டாராம். இங்கு நடைபெறும் அரசு விழாக்களுக்கு அவர்தான் உணவுபதார்த்தங்களை சப்ளைசெய்கிறார். தற்போது கலாம் வந்திருப்பதால், தென்னிந்திய உணவு வகைகளை தயாரிக்கும் பாக்கியம்தனக்குக் கிடைத்ததாக சந்திரிகா பெருமையுடன் கூறுகிறார்.
ஐஸ்லாந்து அதிபருக்கு தென்னிந்திய உணவு வகைகள் ரொம்பப் பிடிக்குமாம். சமையலுக்குத் தேவையான மசாலா பொருட்கள்,மற்ற பொருட்களை இந்தியாவிலிருந்தே சந்திரிகா வரவழைத்துக் கொள்கிறாராம்.
அப்துல் கலாமுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் மெதுவடை, இட்லி, வடை, சாம்பார், தேங்காய் சட்னி ஆகியவை பிராதனமாகஇடம் பெற்றிருந்தது.
விருந்துக்கு முன்னதாக நடன, கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதில் சலீல் பட் என்பவர் மோகன வீணை வாசித்தார்.சர்மிஷ்டா முகர்ஜியின் குழுவினர் கதக் நடனம் வழங்கினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications