வெளிநாட்டு வேலை: போலீஸ் கமிஷனர் அறிவுரை
சென்னை:
வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இளைஞர்கள் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரை அணுகி, தாங்கள் வேலை பார்க்கப்போகும் நிறுவனம் குறித்து முழுவதுமாக விசாரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு அதிக அளவில் புகார்கள்வந்த வண்ணம் உள்ளன.இதைத்தவிர்க்க, வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள், மத்திய குற்றப் பிரிவை அணுகி, தாங்கள் வேலைபார்க்கப் போகும் நிறுவனம் எப்படிப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம், வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து அனைத்துத் தகவல்களும் உள்ளன. தரமானவெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியல் இளைஞர்களின் பார்வைக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸில் உள்ளது.
பிரச்சினை வந்து அவதிப்படுவதை விட முன்கூட்டியே தெளிவுபடுத்திக் கொண்டு செல்வது நல்லது என்று கூறினார் நடராஜ்.
முன்னதாக சமீபத்தில் சூடானிலிருந்து மீட்கப்பட்ட 29 பேருக்கும், அவர்கள் வேலை பார்த்து வந்த சூடான் நிறுவனம் தரவேண்டிய சம்பளப் பாக்கியான தலா ரூ. 3.48 லட்சம் பணத்தை நடராஜ் இளைஞர்களிடம் வழங்கினார்.
சென்னை காவல் துறை, சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, சம்பளப் பாக்கியை சம்பந்தப்பட்டநிறுவனத்திடமிருந்து பெற்றுத் தரக் கோரியிருந்தது. இதையடுத்து இளைஞர்களை வேலைக்கு அனுப்பிய சென்னையைச் சேர்ந்தஅல் கரீம் ஏஜென்சி, சம்பந்தப்பட்ட 29 பேரின் சம்பளப் பாக்கியை தானே வழங்குவதாக அறிவித்தது. அதன்படி அந்த நிறுவனம்கொடுத்த பணத்தை இளைஞர்களிடம் வழங்கினார் நடராஜ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications