ஜெ. புகார்: பாட்டீல் மீது கருணாநிதி அதிருப்தி!
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் குறித்து புதுவையில் நடந்த தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர்ஜெயலலிதா கடுமையாக குற்றம் சாட்டி பேசியிருப்பது குறித்து மத்தியஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறுப்பு ஏதும்தெரிவிக்காதது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பொதுவான விஷயங்கள் குறித்துப் பேசத்தான் அந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தது. மாநிலங்களைப் பாதிக்கும் விஷயங்களைமட்டுமே அங்கு விவாதித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தபோதுஅதை இடை மறித்து மறுக்கும் முயற்சிகள் நடக்காதது துரதிர்ஷ்டவசமானது.
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டின்போது ஜெயலலிதா பேசிய பேச்சுக்களுக்கு சரியான மறுப்போஅல்லது எதிர்ப்போ வெளியிடப்படாதது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஜெயலலிதா நடந்து கொண்ட முறைஅநாகரீகமானது, நியாயமில்லாதது.
எதிர்காலத்திலாவது, ஜெயலலிதா போன்றோர் இதுபோல பொய்யான புகார்களைக் கூறும்போது அதை எதிர்க்கும் துணிவுஅனைவருக்கும் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று மறைமுகமாக சிவராஜ் பாட்டிலை சாடியுள்ளார் கருணாநிதி.
மெட்ரிக் பள்ளிகள் விவகாரம்: இதற்கிடையே அங்கீகாரமற்ற, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மூடப்பட்டது குறித்து கேட்கப்பட்டகேள்விகளுக்கு கருணாநிதி பதிலளிக்கையில், அரசு எடுத்த முடிவு சரியா, தவறா என்பது இப்போது பிரச்சினை இல்லை. ஆனால்முன்கூட்டியே பள்ளி நிர்வாகிகளை எச்சரிக்கை செய்து, பெற்றோர்களுடன் கலந்து பேசி யாருக்கும்பாதிப்பு ஏற்படாமல்பார்த்திருந்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் 3110 நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளது, இதில் ஒன்னேகால் லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதோடு, ஆசிரியர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகிறது என்பது கவலை தருகிறது. தகுந்தமுன்னறிவிப்பின்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
கடந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலும், பின்னர் திமுக ஆட்சிக்காலத்திலும் நுழைவுத் தேர்வுகள் எந்தவிதப் பிரச்சினையும் இன்றிநடத்தப்பட்டன. நுழைவுத் தேர்வு தேவையில்லை என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. தேர்வு எப்படிப்பட்டதாகவும்,எந்த முறையில் நடத்தப்பட்டாலும், அதில் குழப்பம் இல்லாமல், நியாயமாக, நேர்மையாக நடத்தப்பட வேண்டும்.இல்லாவிட்டால் பிரச்சினைதான் வரும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதற்கிடையே, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அனுமதி பெறாத பள்ளிகளை மூடும் பணியில்அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் உள்ள 10 கல்வி மாவட்டங்களிலும் உள்ள அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்குகல்வித்துறை அதிகாரிகள் இன்று சென்று பள்ளிகளை மூடி சீல் வைத்தனர்.
பள்ளிக்கு வந்திருந்த மாணவர்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம்,மாணவர்களுக்கு அவர்களது இடமாற்றச் சான்றிதழை (டி.சி) கொடுத்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications