ஆதியின் லீலைகள்: "கக்குகிறார்" சாரதி!
சென்னை:
தந்தை ஆதிகேசவனும், தானும் பலமுறை சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று, மோசடிப் பணத்தில் உல்லாசமாகஇருந்ததாக ஆதியின் மகன் சாரதி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மோசடி மன்னன் ஆதி கேசவனின் மகன் சாரதியை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.ஆரம்பத்தில் விசாரணைக்கு சாரதி ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. எல்லாம் செய்தது எனது தந்தைதான். எனக்கு ஒன்றும்தெரியாது என்று மட்டுமே அவர் கூறி வந்தார்.
மோசடி செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஆதிகேசவனும், அவரது மகனும் உல்லாசமாக வாழ்ந்துள்ளனர். சொத்துக்களைவாங்கி ஒரு பக்கம் குவித்ததுடன், பல்வேறு நாடுகளுக்கும் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றுசந்தோஷமாக இருந்துள்ளனர்.
ஆதிகேசவனிடம் பணம் கேட்டு பல வெளிநாட்டு இந்தியர்களும் அணுகியுள்ளனர். அவர்களிடம் தேனொழுக பேசும் ஆதிகேசவன், கேட்டதை விடஅதிகமாக கொடுப்பதாக ஆசை காட்டுவாராம். இதனால் மகிழ்ந்து போகும் அவர்கள் உடனடியாகஆதியை தங்களது நாடுகளுக்கு அழைத்து விருந்து உபசாரம் செய்து குளிர்வித்து அனுப்புவார்களாம்.
இதுபோன்ற வெளிநாட்டுப் பயணங்களின்போது சாரதியையும் ஆதி உடன் அழைத்துச் செல்வாராம். ஐந்து நட்சத்திரஹோட்டல்களில் தங்கி உல்லாசத்தை அனுபவித்து விட்டுத்தான் இருவரும் சென்னை திரும்புவார்களாம்.
எந்த எந்த நாடுகளுக்கு சென்றுள்ளார்கள், வெளிநாட்டில் யார் யாரிடம் மோசடி செய்தார்கள், அங்கு சொத்து ஏதும் வாங்கிப்போட்டிருக்கிறார்களா என்பது உள்ளிட்ட தகவல்களையும் போலீஸார் சாரதியிடம் கேட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications