எம்.எல்.ஏ. மகன் அட்டகாசம்!
மதுரை:
மதுரை சமயநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மகன் குடிபோதையில் தகராறு செய்ததில் ஏற்பட்ட மோதலில் 3பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 3 வீடுகளும் சேதமடைந்தன.
பொன்னம்பலத்தின் மீது அதிமுகவினரே பல்வேறு புகார்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவரது 2 வது மகன்தில்லையம்மபலம், பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். தனது நண்பர்கள் சிலருடன் மந்திக்குளம் என்ற கிராமத்திற்கு அவர்சென்றார்.
பின்னர் தனது ஊருக்கு வந்து 50க்கும் மேற்பட்டவர்களைத் திரட்டிக் கொண்டு மீண்டும் மந்திக்குளம் சென்றார் தில்லையம்பலம்.அங்கு புருஷோத்தமன், ராமமூர்த்தி உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட மொத்தம் 3 வீடுகளைஎம்.எல்.ஏ.வின் மகனுடன் வந்தகும்பல் தாக்கி சேதப்படுத்தியது.
இதுதொடர்பாக ஊர்க்காரர்களுக்கும், அவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பேர் அரிவாள்களால் வெட்டப்பட்டனர்.மூன்று பேரும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, தில்லையம்பலத்தின் சொந்த ஊர் கருவனூர், தனது நண்பர்களுடன்அடிக்கடி மந்திக்குளம் வந்து அங்குள்ள பெண்களைக் கேலி செய்வதும், குடித்து விட்டு கலாட்டாவில் ஈடுபடுவதுமாக அவர்இருந்துள்ளார். இதை ஊர்க்காரர்கள் தட்டிக் கேட்டபோது தனது தந்தையின் பெயரைச் சொல்லி மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸாருக்குப் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் செவ்வாய்க்கிழமைதில்லையம்பலம் அங்கு தனது நண்பர்களுடன் வந்தபோது பெரும் மோதல் வெடித்துள்ளது.
மோதலையடுத்து கருவனூர், மந்திக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊமச்சிக்குளம்போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications