தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம்: கருணாநிதி
சென்னை:
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத் திமுக செயற்குழு முடிவு செய்துள்ளது.
திமுக தலைமை செயற்குழு கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி,வாக்காளர்கள் பெயர்களை சேர்ப்பதற்கு கடைசி நாளில் 2 லட்சம் பேர் தங்களது பெயர்களை சேர்க்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.இவர்கள் அனைவருமேஅதிமுகவினர். மே 30ம் தேதி அதிமுக அமைச்சர்களே இந்த பெயர்களை சேர்க்குமாறு மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கூட்டணிக் கட்சியினரோடுசேர்ந்து போராட்டம் நடத்த தற்போது முடிவு செய்துள்ளோம். டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் அல்லது சென்னையில் உள்ள தலைமைத்தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பா கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு ஆலோசனைநடத்த உள்ளோம்.
ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டிருக்கும் இந்த மனுக்கள் குறித்து உரிய விசாரணை நடத்த மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என தலைமைத்தேர்தல் ஆணையருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதுபோல மொத்தமாக விண்ணப்பங்களைக் கொடுத்தால் அதை ஏற்க அதிகாரிகள் மறுக்கிறார்கள். ஆனால் அதிமுகவினர்கொடுக்கும் விண்ணப்பங்களை பதில் பேசாமல் வாங்கிக் கொள்கிறார்கள் என எனக்குத் தகவல் வந்துள்ளது.
இதை சட்ட ரீதியாக அனுகவும் கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வழங்கப்படும் மனுக்களை ஏற்கக் கூடாது என்று நாங்கள்கோருகிறோம். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையரின் உதவியோடு, தமிழக சட்டசபைத் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாகவேஇவ்வாறு லட்சக்கணக்கான பெயர்க்ளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இதில் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிடவேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications