சென்னை: புதிய அரசு மருத்துவனை ஜூலை 1ல் திறப்பு
சென்னை:
ரூ. 104 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை அரசு மருத்துவமனையின் புதிய 7 மாடிக் கட்டடம் ஜூலை 1 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
சென்னை அரசு மருத்துவமனையின் பழைய கட்டடங்கள் மிகவும் பழுதடைந்திருந்த காரணத்தால் அவற்றை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிதாக ரூ. 104 கோடியில் 7 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
ஜூலை 1ஆம் தேதி மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். அதி நவீன வசதிகள், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டதாக இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. இதுதவிர கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வசதியும் இந்தப் புதிய மருத்துவமனையில் ஏற்படுத்தப்படவுள்ளது.
தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் மிகவும் குறைந்த செலவில் அதி நவீன வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நடுத்தர வகுப்பு மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
1500க்கும் மேற்பட்ட படுக்கைகள், 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்டதாக இந்த கட்டடம் அமைந்துள்ளது. இந்த புதிய கட்டடங்களுக்கு அருகே உள்ள பழைய கட்டடங்களும் தொடர்ந்து செயல்படும். மொத்தம் 3000க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்டதாக சென்னை அரசு பொது மருத்துவமனை விளங்குகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications