"கத்திரி"க்குப் பிறகும் சென்னையில் கடும் வெயில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்து 3 நாட்களாகியும் சென்னை நகரில் வெயில் குறைந்தபாடில்லை. 105 டிகிரிஅளவுக்கு வெயில் வாட்டி வருவதால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததால் வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெயில் சற்றும்குறையாமல் கொளுத்தி வருகிறது. புதன்கிழமை சென்னையில் 105 டிகிரி வெயில் அடித்தது.
வேலூர், மதுரை ஆகிய ஊர்களிலும் இதே அளவுக்கு வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் கொளுத்திவருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.












Click it and Unblock the Notifications