4ஆம் தேதி பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற 4ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், கடந்த மார்ச் மாதம் 7.68 லட்சம் மாணவ, மாணவியர் பத்தாவது வகுப்பு தேர்வை எழுதினர். விடைத்தாள்திருத்தும் பணி முடிந்து பின்னர் மதிப்பெண் பட்டியல்களும் தயாராகி விட்ட நிலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல்இருந்தது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளிலேயே தங்களது பள்ளிகளில் முடிவுகளை மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளலாம்.பல்வேறு இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications