கார் மோதி 3 குழந்தைகள் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே தாறுமாறாக கார் ஓடி மோதியதில் பள்ளிக்குச் சென்ற இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் பரிதாபமாக இறந்தனர்.

மதுரை அருகே மேலூரைஅடுத்துள்ளது கருங்காலக்குடி. இப்பகுதி அருகே உள்ள பரமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அருகே உள்ள வஞ்சி நகரம் ஊராட்சிப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

வெள்ளிக்கிழமை காலை இவர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி நெடுஞ்சாலையில் ஓரமாக இவர்கள் சென்றபோது, சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த ஒரு கார் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் வேகமாக வந்த கார் தாறுமாறாக ஓடி குழந்தைகள் கூட்டத்தில் புகுந்தது.

இதில் 10 வயதாகும் பிரியா, திணேஷ் குமார், சரவணன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

கோடை விடுமுறைக்குப் பின் வியாழக்கிழமைதான் பள்ளிக்கூடங்கள் திறந்தன. பள்ளிக்குச் சென்ற 2வது நாளிலேயே 3 சிறுவர், சிறுமியரும் இறந்தது அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+