2000 பள்ளிகளுக்கு 1 மாதம் அவகாசம்
சென்னை:
நர்சரி பள்ளிகளை மூட மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. மேலும் 2000 பள்ளிகளுக்கு ஒரு மாதம் அவகாசம்அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு தீ தடுப்பு நடவடிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாத நர்சரி பள்ளிகளை மூட தமிழகஅரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2000 நர்சரி பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.
இந் நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளி நிர்வாகத்தினர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
அதில், அனுமதி பெறாத பள்ளிகளை மூடவேண்டும் என்ற விருதுநகர் மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்காலதடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இப்ராகிம் கலிமுல்லா மாவட்ட கல்விஅதிகாரியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதுபோல் மதுரையை சேர்ந்த 39 பள்ளிகள் தொடர்ந்த மற்றொரு வழக்கில், நீதிபதி சொக்கலிங்கம் அரசு உத்தரவுக்கு இடைக்காலதடை விதித்தார். இதன் மூலம் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 40 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட இடைக்கால அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாமல் உள்ள 2000 நர்சரி பள்ளிகளுக்கு 1 மாதம் அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கீகாரம் பெறாத பள்ளிகள் அரசு விதிகளின் படி விண்ணப்பித்தால் 1 மாத காலத்திற்குள்ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications