ஜெ.வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்::
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சொத்துக் குவிப்புவழக்கு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகளை சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குகளை சேர்த்து விசாரிக்கக் கூடாது, தனித்தனியாகத்தான் விசாரிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதாடினார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
தினகரனின் வழக்கறிஞர் சரவணக்குமார் வாதிடுகையில், இரு வழக்குகளையும் சேர்த்து நடத்தலாமா, வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம் தான் முடிவெடுக்கவேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் 2வது வழக்கு துவங்கப்பட்டுள்ளது.
லண்டன் ஹோட்டல் வழக்கை புதிய வழக்காக கருதக்கூடாது.இதை கூடுதல் குற்றமாகத் தான் கருத வேண்டும். லஞ்சமாக 1 ரூபாய் வாங்கினாலும் குற்றம் தான், 1 கோடிரூபாய் வாங்கினாலும் குற்றம் தான். இது ஒரு குற்றம் அது குற்றம் என்று பிரிக்க முடியாது.
சொத்து இங்கே வாங்கினால் ஒரு வழக்கு, மற்றொரு இடத்தில் வாங்கினால் இன்னொரு வழக்கா? குற்றங்களை தனித்தனியாக பிரிக்க முடியாது. எனவே 2வதுவழக்கையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதிடுகையில், குற்றம் நடந்த காலம் ஒரே காலமாக இருக்கலாம். ஆனால் முதல் வழக்கில் ரூ.66.65 கோடி வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்க்கப்பட்டுள்ளது. 2வது வழக்கில் ரூ.50 கோடி சொத்து சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளை சேர்க்க முடியாது. தனித்தனிவழக்குகளாகத் தான் நடத்த வேண்டும் என்றார்.
வழக்கறிஞர் ஜோதி வாதிடுகையில், நாங்கள் சட்டப்படி நடந்து வருகிறோம். சட்டத்தைக் கடைப்பிடித்து இதுவரை 12 வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளோம். இந்தவழக்கிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இந்த வழக்கில் சில விளக்கங்கள் கேட்கப்பட்டிருந்தது. இதற்கான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். வேண்டுமானால் அந்த வழக்குக்கும்அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடலாம் என்றார்.
இதையடுத்து வழக்கறிஞர்களிடம் சில விளக்கங்களை கேட்க வேண்டியுள்ளது.மேலும் வழக்கறிஞர்களின் வாதங்களை படிக்க வேண்டியுள்ளது. எனவே வழக்கை 9ம்தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று நீதிபதி பச்சாப்பூரே கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications