நெல்லையில் கலவரம்: துப்பாக்கி சூடு- வாலிபர் கொலை
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. கலவரக்காரர்களை கலைக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே உள்ளது கரிசூழ்ந்தமங்கலம். இப்பகுதியில் இரு பிரிவை சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள்.இவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.
கணபதி பலத்த காயங்களுடன் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அறிந்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆயுதப்படை போலீஸாரும்குவிக்கப்பட்டனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட கண்ணனின் ஆதரவாளர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் போதுஎதிர் தரப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. வைக்கோல் படப்புகளுக்கும் தீ வைக்கப்பட்டன.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைக்க முயன்றனர். ஆனால் போலீஸார் மீது கலவரக்காரர்கள் சரமாரியாக கற்களை வீசினார்கள். நிலைமை மோசமாவதைஉணர்ந்த போலீஸார் கலவரக்காரர்களை விரட்ட வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதன் பிறகே கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர்.
சம்பவ இடத்திற்கு தென் மண்டல ஐஜி திரிபாதி, டிஐஜி கோபாலகிருஷ்ணன், எஸ்பி ஆனந்த் குமார் சோமானி மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணைநடத்தினர்.
கலவரம் நடந்த கரிசூழ்ந்தமங்கலம் கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications