ஊட்டி வந்த அமெரிக்க வாலிபரிடம் கொள்ளை
ஈரோடு:
ஊட்டிக்கு சுற்றுலா வந்த அமெரிக்க வாலிபரிடம், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
நியூயார்க்கை சேர்ந்தவர் ஜெஸ்ஸி ஜேம்ஸ் (21). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்தார்.மும்பை, கோவா உள்பட பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். மும்பையில் இருந்து கடந்த 2ம் தேதி இவர் சென்னைவந்தார்.
வாடகை காரில் டிரைவர் தவிர மற்றொருவரும் வந்துள்ளார். சேலம் அருகே காரை நிறுத்தி விட்டு ஜெஸ்ஸி ஜேம்ஸுக்கு அவர்கள்குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதை குடித்த சில நிமிடங்களில் ஜேம்ஸ் மயக்கமானார். மீண்டும் விழித்துப் பார்த்த போது அவர்ரோட்டோரத்தில் கிடந்துள்ளார்.
அது எந்த இடம் என்பது அவருக்கு தெரியவில்லை. அவர் தன்னுடன் இரண்டு பேக்குகளை எடுத்து வந்துள்ளார். ரூ.23,000பணம், 250 யூரோ பணம், 750 அமெரிக்க டாலர்கள் மற்றும் பொருட்கள் அதில் இருந்துள்ளன. இவை அனைத்தும் கொள்ளைபோனது.
கையில் காசில்லாத நிலையில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்த ஜேம்ஸ், அங்கேயே இரவு தங்கி மறு நாள் தனது கழுத்தில்இருந்த ரூ.60,000 மதிப்புள்ள தங்கச் சங்கிலியை அப்பகுதியிலுள்ள ஒரு கடையில் ரூ.2 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.
அந்தப் பணத்தில் நியூயார்க்கில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்கதூதரகம் மற்றும் ஆர்.சி., சர்ச்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஈரோடு ஆர்.சி. சர்ச் பங்குத்தந்தை ஜோசப் தன்ராஜுக்கு தகவல் தரப்பட்டு, ஜெஸ்ஸி ஜேம்ஸ் மீட்கப்பட்டார்.
நேற்று காலை ஈரோடு கலெக்டர் கார்த்திகேயன் முன் ஜேம்ஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.
கலெக்டர் உத்தரவின் படி ஈரோடு டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மும்பையில் தனது உறவினர்கள் இருப்பதாகஜெஸ்ஸி ஜேம்ஸ் கூறியதையடுத்து, அவர் ஈரோட்டில் இருந்து மும்பை செல்வதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் செய்துள்ளார்.
கொள்ளை கும்பலைப் பிடிக்கவும், ஈரோட்டில் ஜெஸ்ஸி ஜேம்ஸ் இழந்த நகையை மீட்கவும் போலீஸார் நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications