விழுப்புரம் மாவட்டத்தில் போலி வாக்காளர்கள் கண்டுபிடிப்பு
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்று வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினார்கள். இதில் பல பகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. இதில், பெயர் சேர்ப்பு மற்றும் ஆட்சேப விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி நாளில் மட்டும் 12லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து மத்திய தேர்தல் கமிஷனில் இருந்து நேற்று இரு நபர் குழு வந்து விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் போலி வாக்காளர்கள் அதிக அளவில்சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தபஸ் குமார், மென்டிரட்டா, தேர்தல் ஆணைய சட்ட ஆலோசகர் காமன் ரீத்தா, தமிழக தேர்தல் ஆணைய இணைசெயலாளர் பிரகதா, துணை செயலாளர் ராமன் ஆகியோர் இன்று காலை விழுப்புரம் வந்தனர்.
அவர்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பாலச்சந்திரனிடம் விசாரணை நடத்தினர். விண்ணப்பங்களையும் ஆய்வு செய்தனர்.
இம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 1,20,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதும், கடைசி நாளான 30.05.05 அன்று மட்டும் 65,000விண்ணப்பங்கள் மொத்தமாக பெறப்பட்டதும் தெரியவந்தது.
இதில் விழுப்புரம், கண்டமங்கலம், முகையூர் ஆகிய தொகுதிகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்த போது உண்மைக்கு மாறாக 17,834 விண்ணப்பங்கள்பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications