சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவிய தயாநிதி மாறன்
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் லக்கேஜ் ஸ்கேனர் பற்றாக்குறையால் மணிக்கணக்கில் வரிசையில்காத்திருந்த விமானப் பயணிகளுக்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உதவிக் கரம் நீட்டினார்.
பயணிகளின் பெட்டிகள் சோதனையிடுவது தாமதமானதால் 5 சர்வதேச விமானங்களும் காத்துக் கொண்டிருந்தன.
எதற்காக இவ்வளவு கூட்டம் நிற்கிறது என அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் விசாரித்தபோது, விமான நிலையத்தில் ஒரே ஒருலக்கேஜ் ஸ்கேனர் தான் இருப்பதாகவும் இதனால் தான் பயணிகளை அனுப்ப தாமதமாவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து விமான நிலைய துணைக் கண்காணிப்பாளரை அழைத்து மாறன் விசாரித்தார். அப்போது விமான நிலையத்தின்இன்னொரு ஸ்கேனர் கடந்த 3 மாதங்களாக ரிப்பேராகிக் கிடப்பதாகவும், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் ஒரு மாற்றுஸ்கேனர் இருப்பதாகவும், ஆனால் அதைப் பயன்படுத்த உயர் அதிகாரிகளின் அனுமதி தேவை என்றும் பதில் கிடைத்தது.
இதனால் எரிச்சலடைந்த மாறன், தனது செல்போனில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பிரபுல்படேலை தொடர்பு கொண்டார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் படும் பாட்டை விளக்கிய மாறன், உடனே உதவக்கோரினார்.
இதைத் தொடர்ந்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரிகளுக்கு பிரபுல் படேலிடம் இருந்து உத்தரவு பறந்தது. அடுத்த15 நிமிடங்களில் அங்கு இன்னொரு ஸ்கேனர் வைக்கப்பட்டது.
இதன் பிறகே பயணிகள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
லக்கேஜ் ஸ்கேனர் பிரச்சனையால் மணிக்கணக்கில் விமான நிலையத்தில் நள்ளிரவில் வரிசையில் நின்ற பயணிகளிடம் தயாநிதிமாறன் வருத்தமும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications