தர்மபுரி பஸ் எரிப்பு: 40 நாட்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் விசாரணை
சேலம்:
தர்மபுரியில் கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவிகள் பஸ்சுடன் சேர்த்து அதிமுகவினரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை 40 நாள்இடைவெளிக்குப் பின் இன்று மீண்டும் தொடங்கியது.
இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 40 நாட்கள்விடுமுறைக்குப்பின் இன்று இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கியது.
இதையடுத்து மாணவிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் நடராஜன் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து டாக்டர் சம்பத் ஆஜராகி, பஸ் எரிப்பில் படுகாயமடைந்த 16 மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தது குறித்து சாட்சியமளித்தார்.
அதிமுகவினரின் வன்முறை வெறியாட்டத்தில் பலியான இன்னொரு மாணவியான காயத்திரியின் தந்தை வெங்கடேசன் நாளை சாட்சியளிக்கவுள்ளார்.
இவரைத் தவிர மாணவிகளுக்கு சிகிச்சை அளித்த தர்மபுரி அரசு மருத்துவமனை டாக்டர்களான கோவிந்தராஜ், ராஜ ரத்தினம், கேசவமூர்தி ஆகியோரும் சாட்சியம்அளிக்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications
