ஹஜ்: இந்திய பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

2006ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 1.37 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டைவிட 10,000 பேர் அதிகமாகும்.

இத் தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்தார். அகில இந்திய ஹஜ் மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறுகையில்,

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால், மொத்த எண்ணிக்கையை உயர்த்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

இந்த 1.37 லட்சம் பேரில் 82,000 பேர் ஹஜ் கமிட்டி மூலமாக அழைத்துச் செல்லப்படுவர். இவர்களில் 52,000 பேர் செளதி ஏர்லைன்ஸ் மூலமும், 30,000 பேர் ஏர்இந்தியா மூலமும் அழைத்துச் செல்லப்படுவர்.

மீதமுள்ள 55,000 பேரில் 45,000 பேர் தனியார் ஏஜென்டுகள் மூலம் ஹஜ் அழைத்துச் செல்லப்படுவர்.

இவர்களில் 1 லட்சம் பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானம் மூலம் ஜெட்டாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர். மீதமுள்ள 37,000 பேர் நேரடியாக மதினாநகருக்கே கொண்டு செல்லப்படுவர்.

திரும்பி வருகையில் 97,000 பேர் ஜெட்டாவில் இருந்தும் 40,000 பேர் மதினாவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர்.

அதே போல மெக்காவில் இந்தியர்களுக்கான இட வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புனிதப் பயணிக்கும் இதுவரை 3 சதுர மீட்டர் இடம் அளிக்கப்பட்டுவந்தது. இப்போது அது 3.5 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1,050 செளதி ரியால் செலுத்தினால் ஹராம் ஷெரீப் பகுதியில் இருந்து 1001 முதல் 1200 மீட்டருக்குள்ளேயே தங்கியிருக்கவும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதுஎன்றார் நட்வர் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+