சென்னையில் ரூ.2 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
சென்னையில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்தஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் பாலதண்டாயுதபாணி செய்தியாளர்களிடம்கூறுகையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் போதைப் பொருளுடன் சிலர் வருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த சரூப் (வயது 31), மத்திய பிரதேசத்தை சேர்ந்த இத்ரீஸ் (வயது 30) மற்றும் தூத்துக்குடியைசேர்ந்த ஜேசு மரியான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போது ராஜஸ்தானிலிருந்துபோதைப் பொருளை கொண்டு வருவதாகவும், இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட் ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ. 2 கோடியாகும் என்றார் பால தண்டாயுதபாணி.












Click it and Unblock the Notifications