குமரி மாவட்டத்தில் பருவ மழை தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கேரளாவைப் போலவே, கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்குவது வழக்கம். அதே காலகட்டத்தில் குமரிமாவட்டத்திலும் பருவ மழை பெய்யத் தொடங்கும்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாகபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல, கோவையிலும் சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இது தவிர கம்பம், பெரியகுளம், தேனி ஆகியபகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
சிவகங்கையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்துபோக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications