நர்சரி பள்ளி: ஓராண்டு அவகாசம் அளிக்க கோரிக்கை
சென்னை:
நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு அரசிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசத்தை ஓராண்டாக நீடிக்குமாறுசென்னையில் நேற்று நடைபெற்ற பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு தீ தடுப்பு நடவடிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாத நர்சரி பள்ளிகளை மூட தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2000 நர்சரி பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.
இந் நிலையில் அங்கீகாரம் பெறாத சில பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்துஅந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கல்வித்துறை சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள்தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் சோதனை நடத்துகின்றனர்.
இதற்கிடையே நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு நர்சரி,பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.
இக்கூட்டத்தில் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் அரசிடம் இருந்து அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசத்தை ஓராண்டாகநீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் நர்சரி பள்ளிகளை மூடுமாறு வலியுறுத்துவதைதவிர்க்குமாறும் அரசிடம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலர்கிறிஸ்துதாஸ் கூறுகையில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை வலுக்கட்டாயமாக மூடச் சொல்வது தவறானது. அவ்வாறுஅங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தனித்தனியாக கோர்ட்டில் முறையிடலாம் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார்என்றார்.












Click it and Unblock the Notifications