தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை
சென்னை:
எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த சென்னை மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான பாஸ்கர் என்பவரின் மகள் ரம்யா என்பவர் தான் இந்த சோக முடிவைதேடிக் கொண்டார்.
ரம்யா, அயனாவரத்திலுள்ள மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தனது தேர்வு முடிவை இவர் மிகவும்ஆவலுடன் எதிர்பார்த்து வந்தார். ஆனால் தேர்வில் ரம்யா தோல்வியடைந்தார்.
இதனால் மனமுடைந்த ரம்யா வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகியஅவரை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரம்யா இறந்தார்.
தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி ரம்யா தோல்வியடைந்தார். ஆனால் தேர்வில் வெற்றி பெற்ற ஒரு மாணவியும்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புலிமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகள் கோகிலவாணிஅருகிலுள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நன்றாக படிக்கும் மாணவியான இவர் தேர்வு முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தார். கடந்த 4ம் தேதி முடிவுகள்வெளியாயின. ஆனால் அதற்கு முன்பே இன்டர்நெட்டில் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதாகவும், அதில் கோகிலவாணியின்எண் இல்லை என்றும் சிலர் புரளியை கிளப்பியுள்ளனர்.
இதை உண்மை என நம்பிய கோகிலவாணி மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தேர்வு முடிவுவெளியான போது கோகிலாவாணி வெற்றி பெற்றது தெரிய வந்தது.
புரளியால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications