அதிகாரிகள் மீது நடவடிக்கை: தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாக்காளர் பட்டியலில் போலி பெயர்களை சேர்த்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதிஎழுதிய கடிதம் தலைமை தேர்தல் கமிஷனர் டாண்டனிடம் இன்று அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக தலைவர்கருணாநிதி எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்ட படி அனுப்பப்பட்ட குழுவினர் நடத்திய ஆய்வில், போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இத் தவறினை செய்த அதிகாரிகள் மீதும், அதற்கு தூண்டுதலாக இருந்த ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கஆவண செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து தலைமை தேர்தல் ஆணையர் டாண்டனுக்கு, கருணாநிதி எழுதியகடிதத்தை திமுகவின் மத்திய அமைச்சர்கள் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், சுப்புலெட்சுமி ஜெகதீஸன், க.வேங்கடபதி மற்றும்குப்புசாமி எம்.பி., காங்கிரஸ் கட்சி எம்.பிக்களான கார்வேந்தன், சித்தன், பாமக எம்.பி. தன்ராஜ் ஆகியோர் இன்றுவழங்குகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட 2 நபர் குழு, நாளை மத்தியதேர்தல் ஆணையத்திடம் தனது விசாரணை அறிக்கையை அளிக்கவுள்ளது.

வாக்காளர் பட்டியலில் முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக தபஸ் குமார், சென்ரீட்டா ஆகிய இருபார்வையாளர்களை தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. இருவரும் சென்னையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினர். பின்னர் இருவரும் விழுப்புரம், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்திருத்தப் பணியை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் விழுப்புரம், சேலத்தில் போலி வாக்காளர்கள், தங்களது பெயர்களை பட்டியலில் சேர்க்க மனு கொடுத்திருந்ததுதெரியவந்தது. இந்த ஆய்வை முடித்துக் கொண்டு இரு தேர்தல் பார்வையாளர்களும் இன்று டெல்லி திரும்பினர்.

டெல்லி திரும்பும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது விசாரணை திருப்திகரமாகஇருந்தது. இதுகுறித்து இறுதி ஆய்வறிக்கையை நாளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்போம்.

சேலத்தில், பெயர் சேர்ப்பு விண்ணப்பப் படிவத்தை சரியான முறையில் விநியோகிக்காத அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கைபதிவு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+