பெண்ணை கடத்தி கற்பழித்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்: தலைமறைவு
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
தன்னை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் புகார் கூறியுள்ளார்.
கடலூர மாவட்டம் சோழத்தரம் காவல் நிலைய எஸ்.ஐ. பாபு மீது இந்தப் புகாரைக் கூறியுள்ளார் மாலதி என்ற 25 வயதுப் பெண்.தனது புகாரில் மாலதி கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் சேத்தியாதோப்பு அருகே நான் சென்றபோது என்னை மிரட்டி தனது வாகனத்தில் ஏற்றினார். சிதம்பரத்தில் ஒருலாட்ஜுக்குக் கொண்டு போனார். அங்கு 5 நாட்கள் என்னை அடைத்து வைத்து கற்பழித்தார். பின்னர் தான் என்னை விடுவித்தார்.
இவ்வாறு மாலதி புகார் கூறியுள்ளார். இந் நிலையில் எஸ்ஐ பாபு தலைமறைவாகிவிட்டார். அவர் மீது கடத்தல், கற்பழிப்பு,மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்ட பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications