புலிகள் பெட்ரோல் கடத்துவதாக அதிகாரிகள் பொய் தகவல்: வைகோ
அரியலூர்:
தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் பெட்ரோல், டீசல் கடத்துவதாக அதிகாரிகள் தவறான தகவல் பரப்பி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் அரசு மக்களிடையே நற்பெயரை பெற்று வருகிறது. அருமையான நிர்வாகத்தையும், கட்டுக் கோப்பான ஆட்சியையும்அது கொடுத்து வருகிறது.
ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை காங்கிரஸ் அரசு நிச்சயம் பூர்த்தி செய்யும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எந்தக் காரணம் கொண்டும் மத்தியஅமைச்சரவையில் நாங்கள் சேர மாட்டோம்.
தமிழகத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் அதிமுகவினர் அதிகாரிகள் உதவியுடன் செய்துள்ள வரலாறு காணாத தில்லுமுல்லு மத்திய அரசு அதிகாரிகள் மூலம்வெளிப்பட்டுவிட்டது. இது போன்ற தில்லுமுல்லு மூலம் தான் இடைத் தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்தார்.
ஒவ்வொரு தொகுதியிலும் பல்லாயிரணக்கான போலி வாக்காளர்கள் படிவங்களை அதிகாரிகள் முன் கூட்டியே பெற்றுக் கொண்டு பின்னர் அவற்றை பட்டியலில்சேர்க்கும் ஜெயலலிதாவின் ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துவிட்டது.
காவிரி விஷயத்தில் கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் தமிழகத்துக்கு நீதி மறுக்கப்படுகிறது. இதனால் முதலில் தென்னக நதிகளை இணைக்க வேண்டும். நதிகளைதேசியமயமாக்கினால் தான் பிரச்சனை தீரும்.
தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் பெட்ரோல், டீசல் கடத்துவதாக அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டுள்ளனர் என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications