வாஜ்பாயுடன் அத்வானி சந்திப்பு
டெல்லி:
தனது ராஜினாமாவை வாபஸ் பெற அத்வானி மறுத்து வருவதால், மூத்த பாஜக தலைவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அத்வானியை வாஜ்பாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு கோரினார்.
பாஜக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை மாற்றக் கோரி மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, பிரமோத் மகாஜன், சுஷ்மா சுவராஜ், உமாபாரதி (இவர் சமீபத்தில் தான் வெளியே போய்விட்டு கட்சிக்கு வந்தார்) உள்ளிட்டோர் அத்வானியுடன் நெடு நேரம் பேச்சு நடத்தினர்.
ஆனால், ஜின்னா குறித்த தனது கருத்துக்கு எழுந்துள்ள விமர்சனங்கள் துரதிஷ்டவசமானவை என்று கூறிய அத்வானி, தனது ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை எனதிட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
என்னை, காட்டிக் கொடுத்த நபர் என்று சிலர் (பிரவீண் தொகாடியா) விமர்சித்த நிலையிலும் அதை எதிர்த்து பாஜகவில் இருந்து யாருமே பேசவில்லை என்று அத்வானிவருத்தம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் அத்வானி இறங்கி வர மறுத்துவிட்டதால், சஞ்சய் ஜோஷி (ஆர்எஸ்எஸ் பிரமுகர்), சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்,முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயில் இல்லத்தில் குவிந்தனர்.
இந்த விஷயத்தில் வாஜ்பாயை வைத்து அத்வானியை சமாதானப்படுத்த அவர்கள் முயன்று வருகின்றனர். ஜின்னா குறித்த அத்வானியின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக வாஜ்பாய் கூறியுள்ளார்.
இந் நிலையில் வாஜ்பாயை அவரது இல்லத்தில் வந்து அத்வானி சந்தித்தார். அப்போது ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு வாஜ்பாய் வலியுறுத்தினார்.
30 நிமிடம் நடந்த இச் சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த அத்வானி நிருபர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications