அத்வானியின் ராஜினாமா: பாஜக நிராகரிப்பு- பதவி போட்டியில் ஜோஷி, ராஜ்நாத், சுஷ்மா
டெல்லி:
![]() |
அத்வானியின் ராஜினாமாவை பாஜகவின் நாடாளுமன்றக் குழு நிராகரித்துள்ளது. அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
தனது ராஜினாமாவை வாபஸ் பெற அத்வானி திட்டவட்டமாக மறுத்து வருவதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பாஜகவின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று மாலை அவசரமாகக் கூடியது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில், அத்வானியின் ராஜினாமாவை ஏற்பதில்லை என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டம் முடிந்தவுடன் பாஜக தலைவர்கள் அத்வானியில் இல்லத்துக்கு விரைந்தனர். ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு கோரினர்.
மாலை நடந்த இக் கூட்டத்திற்கு முன்னதாக இன்று காலை பாஜக துணைத் தலைவரான வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் மூத்த தலைவர்கள் கூடி விவாதித்தனர்.இதில் பிரமோத் மகாஜன், சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், சஞ்சய் ஜோஷி, அனந்த் குமார், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் அத்வானிக்கு, தனது ராஜினாமா முடிவில் திட்டவட்டமாக இருந்தால், அவருக்குப் பதிலாக யாரைத் தலைவராகத் தேர்வு செய்வது என்பது குறித்தும்விவாதிக்கப்பட்டது.
பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க முரளிமனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆர்எஸ்எஸ், விஎச்பிக்கு மிக நெருக்கமானவரான ஜோஷிக்கும் அத்வானிக்கும் எப்போதுமே ஒத்துப் போனதில்லை. இந் நிலையில் அவரையே தலைவராக்க சங்பரிவார் விரும்புகிறது. இதையடுத்து பாஜகவின் பொதுச் செயலாளரூம் ஆர்எஸ்எஸ் பிரமுகருமான சஞ்சய் ஜோஷி (இவரிடம் தான் அத்வானி தனது ராஜினாமாகடிதத்தைத் தந்தார்) நேற்றிரவு திடீரென முரளிமனோகர் ஜோஷியைச் சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே அத்வானியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமானராஜ்நாத் சிங்கை அடுத்த தலைவராக்க பாஜகவில் உள்ள அத்வானி ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இவருக்கு அத்வானியின் ஆதரவும்கிடைக்கும் என்று தெரிகிறது.
இவர் முற்பட்ட ஜாதியான தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கும் ஆர்எஸ்எஸ்சின் ஆதரவும் உள்ளது.
அதே நேரத்தில் கட்சியில் உள்ள பிராமன சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரான சுஷ்மா சுவராஜ், தலைவர் பதவியைப் பிடிக்க விஎச்பியில்உள்ள தனது ஆதரவு தலைவர்களுடன் பேசி வருகிறார்.
இந்த மூவரில் முரளிமனோகர் ஜோஷிக்கே ஆர்எஸ்எஸ்சின் முழு ஆதரவு உள்ளது. அத்வானியின் தீவிர எதிர்ப்பாளரான இவரைத்தலைவராக்குவதன் மூலம் அத்வானிக்கு பாடம் புகட்டலாம் என விஎச்பி கருதுகிறது.
ஆனால், ராஜ்நாத் சிங் அல்லது சுஷ்மாவைத் தலைவராக்க விஎச்பி விரும்புகிறது.
அதே நேரத்தில் அருண் ஜேட்லி, பிரமோத் மகாஜன் ஆகியோரும் தங்களை தலைவர் பதவிக்கு முன்னிறுத்த முயன்று வருகின்றனர். ஆனால் இந்தஇருவருக்குமே சங் பரிவாரின் ஆதரவு இல்லை.
இந் நிலையில் பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளையும் வாஜ்பாய் தலைமையில் கூடவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications