ஜெயேந்திரர் காஞ்சி திரும்பினார்
காஞ்சிபுரம்:
![]() |
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இன்று காஞ்சி சங்கரமடம் திரும்பினர். சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு சங்கரமடம் திரும்பிய இருவருக்கும் பக்தர்கள் மேளதாளம்முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன் வேலூர் மாவட்டம் கலவை கிராமத்தில் உள்ள சங்கர மடத்திற்குச் சென்றுதங்கினார். அங்கு பூஜைகளை நடத்தி சங்கரமடப் பணிகளை கவனித்து வந்தார்.
விஜயேந்திரர் ஜாமீனில் விடுதலையானவுடன், நீதிமன்ற நிபந்தனைப்படி சென்னையில் தங்கியிருந்தார். பின்னர் அவரும் ஜெயேந்திரருடன் கலவைக்கு சென்றுதங்கினார்.
இன்று காலை வேன் மூலம் இருவரும் காஞ்சி சங்கரமடம் திரும்பினர். முன்னதாக கலவையிலிருந்து புறப்படுவதற்கு முன் இருவரும் அங்குள்ள மார்கபந்தீஸ்வரர்கோவிலுக்கு சென்றனர். அங்கு பிரசாதம் வாங்கி விட்டு காஞ்சிக்கு புறப்பட்டனர்.
காஞ்சிபுரம் நகர எல்லையில் இருவருக்கும் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் சங்கரமடம் வந்த அவர்களுக்கு இருவருக்கும் தலையில்பரிவட்டம் கட்டப்பட்டது.
மடத்தின் வாயிலில் சங்கரமட மேலாளர் மகாதேவன், காமாட்சி அம்மன் கோவில் தலைமை பூசாரி செல்லப்பா, சமாஜ்வாடி கட்சி மாவட்டத் தலைவர் மோகன்லால்மற்றும் ஏராளமானோர் சங்கராச்சாரியாருக்கு பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
மடத்தில் பசு மாடும், 2 யானைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் முன் இருவரும் கோ பூஜை நடத்தினார்கள். பின் இருவருக்கும் கற்பூர ஆரத்திஎடுக்கப்பட்டது.
ஜெயேந்திரர் தன்னுடன் தினமும் பூஜை செய்யும் சந்திரமெளலீஸ்வரர் விக்கிரகத்தையும் எடுத்து வந்திருந்தார்.
பல மாதங்களுக்குப் பிறகு காஞ்சி மடத்திற்கு திரும்பிய ஜெயேந்திரரிடம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆசி பெற்றனர். ஜெயேந்திரரும், விஜயேந்திரரும்காஞ்சி திரும்பியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications