நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம்: ஆகஸ்ட் 31 வரை அவகாசம்- ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து பல பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.அங்கீகாரம் பெற கால அவகாசம் தர வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து அங்கீகாரம் பெற 1 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள நர்சரி பள்ளி நிர்வாகிகள் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
இந் நிலையில் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் அளித்து முதல்வர் ஜெயலலிதா இன்றுஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படக்கூடிய இடர்பாடுகளையும், இடப்பெயர்வுகளையும்தவிர்ப்பதற்காக நர்சரி பள்ளி கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் விதிமுறைகளை நிறைவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தேவையான ஒப்புதலைபெறுவதற்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் அளிப்பதென முடிவு செய்துள்ளேன். இக்கால வரம்பிற்குள் விதிமுறைகளை நிறைவு செய்யாத பள்ளிகள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications