சென்னையில் வழிப்பறி: 3 மதுரை போலீசார் கைது!!!
சென்னை:
சென்னையில் நகைக் கடை ஊழியர்களிடம் வழிப்பறி செய்து ரூ. 4 லட்சத்தை பறிக்க முயன்ற மதுரையைச் சேர்ந்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வேலியே பயிரை மேய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழக போலீசார் திருடர்களைப் பிடிப்பதை விட அவர்கள் திருடி பிடிபடுவது அதிகரித்துவருகிறது.
அப்போது ஒரு ஆட்டோவில் வந்த 2 பேர் இருவரையும் வழி மறித்தனர். அதிலிருந்து இறங்கிய இருவரும், நாங்கள் போலீஸ்காரர்கள், உங்கள் பையை சோதனையிடவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், பையைத் தர ஊழியர்கள் மறுக்கவே, பணப் பையை இருவரும் பறித்துள்ளனர்.
இதையடுத்து நகைக் கடை ஊழியர்கள் இருவரும் உதவி கேட்டு கத்தவே, அப் பகுதியில் மப்டியில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் சில போலீசார்அங்கு சென்று பையைப் பறித்த நபர்களைப் பிடித்து யானைக்கவுனி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரித்தபோது தான் பையைப் பறித்த இருவரும் மதுரையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் என்று தெரியவந்தது.
இருவரும் மதுரை திருமங்கலம் காவல் நிலையம் மற்றும் திருநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டையாக்கள் என்று தெரியவந்தது. இந்த கேடுகெட்டகாக்கிகளின் பெயர் பன்னீர் செல்வம் மற்றும் பாஸ்கரன்.
இந்த ஏட்டையாக்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வழிப்பறிக்கு உதவி புரிந்த மதுரை ஆயுதப்படை போலீஸ்காரரான மீனாட்சிசுந்தரம் என்பவரும் பிடிபட்டார்.
இவரைத் தவிர மேலும் 6 பேரும் பிடிபட்டுள்ளனர். நகைக்கடையில் இருந்து ஊழியர்கள் பணத்துடன் சென்னை செல்வதை அறிந்து இவர்கள் ஒரு டாடா சுமோவைவாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளனர்.
இதில் மீனாட்சி சுந்தரம் அலுவலக வேலையாக என்று சொல்லி பேட்டா காசு வாங்கிக் கொண்டு மதுரையில் இருந்து கொள்ளையடிக்க சென்னை வந்துள்ளார். இந்தரிசர்வ் போலீஸ் மீனாட்சி சுந்தரம் வட சென்னை துணை கமிஷ்னர் ஒருவரின் அண்ணன் மகன் என்று தெரியவந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications