மகாராஷ்டிரம், இந்தோனேஷியாவில் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மகாராஷ்டிராவில் இன்று இரண்டு இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அதே போல இந்தோனேஷிய நாட்டிலும் இன்று காலை நிலநடுக்கம் உண்டானது.
மகாராஷ்டிரத்தில் ரத்னகிரி- சதாரா எல்லை பகுதியிலும் கொய்னா பகுதியிலும் இன்று அதிகாலை 3.02 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. கொய்னா பகுதியில் 2.9ரிக்டர் அளவிலும், சதாராவில் 3.8 என்ற அளவிலும் நிலநடுக்கம் இருந்தது.
இதில் கொய்னா பகுதி சில ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரிய பூகம்பத்தைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவானது.












Click it and Unblock the Notifications