போலி வாக்காளர்களை சேர்த்த அதிமுகவினரை காப்பாற்ற ஜெ. தீவிரம்
சென்னை:
தமிழகத்தில் திடீரென கூட்டம் கூட்டமாக வாக்காளர்களைச் சேர்த்த அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம்பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் பெயரை சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பாக மே 30ம் தேதிக்குள் விண்ணப்பம்அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் கடைசி நாளன்று மட்டும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை அதிமுகவினர் தந்தனர். இதற்கு அதிகாரிகளும்உடந்தையாக இருந்ததனர்.
இதில் பெரும்பாலானவர்கள் போலி வாக்காளர்கள் என குற்றம் சாட்டிய திமுக கூட்டணி தேர்தல் ஆணயத்துக்கு புகார்அனுப்பியது, தமிழக ஆளுனரிமும் புகார் கொடுத்தது.
இதையடுத்து தேர்தல் ஆணைய பார்வையாளர்களாக தபஸ் குமார், மென்டிரட்டா ஆகியோர் தமிழகத்திற்கு வந்து ஆய்வுநடத்தினர். இந்த ஆய்வின் இறுதியில் ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக பார்வையாளர்கள் தேர்தல்ஆணையத்திடம் அறிக்கை கொடுத்தனர்.
இதையடுத்து அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட 13 லட்சம் விண்ணப்பங்களையும் ஏற்க கூடாது என்று திமுக கோரிக்கைவிடுத்துள்ளது. இதன் மீது தேர்தல் ஆணையம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், போலி வாக்காளர்களைச் சேர்த்தஅதிமுகவினர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துள்ளது.
மொத்தமாக வாக்காளர்களைச் சேர்த்த கட்சியினர் மீது (அதிமுகவினர்) நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை கண்டித்து அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரும் அமைச்சருமானஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அதில் ஆணையத்தையே குறை கூறியிருந்தார்.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் ஓ.பி. இன்று ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,எதிர்க்கட்சிகளின் புகாரை ஏற்று அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை நீக்க தேர்தல் ஆணையம்நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதே போல இந்த விண்ணப்பங்களைத் தந்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கஇடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால், தடை ஏதும் விதிக்க மறுத்துவிட்ட நீதிபதி ரவிராஜ பாண்டியன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமைத்தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications