பாஜக தீர்மானம்: அத்வானி அதிருப்தி- ராஜினாமாவில் உறுதி
டெல்லி:
தனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுமாறு பாஜகவின் நிர்வாகக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் வாசகங்கள் குறித்து அத்வானிகடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய தீர்மானத்தை நிறைவேற்ற இன்றும் அக் கட்சியின் நிர்வாகக் குழு மீண்டும்கூடுகிறது.
ஆனால், அந்தத் தீர்மான வாசகங்கள் குறித்து அத்வானி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அந்த தீர்மானத்தில் அத்வானியின் பாகிஸ்தான் பயணம் பற்றியோ, விவகாரத்துக்குக் காரணமான ஜின்னா விவகாரம் பற்றியோ,எந்த சூழ்நிலையில் அவர் ஜின்னாவை புகழ்ந்து பேசினார் என்பது பற்றியோ வாசகங்கள் ஏதும் இடம் பெறவில்லை.
மேலும் அத்வானியின் செயலை நியாயப்படுத்தும் வகையிலோ, அவரைத் தாக்கிய சங் பரிவாரைத் தாக்கும் வகையிலோவாசகங்கள் இல்லை.
பாஜக நிர்வாகக் குழுக் கூட்டம் முடிந்தவுடன் தன்னை தீர்மானத்துடன் வந்து சந்தித்த தலைவர்களிடம், தீர்மானம் குறித்துஅத்வானி கடும் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அத் தீர்மானத்துக்கு பதிலளிக்க தனக்கு ஒரு நாள் அவகாசம்தருமாறு அத்வானி கூறிவிட்டார்.
இதையடுத்து புதிய தீர்மானத்தை நிறைவேற்ற பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் ராஜினாமா செய்வதில்அத்வானி தீவிரமாக இருப்பதால், சங் பரிவாரைத் தாக்கும் வகையில் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றுவதில்லை என்றமுடிவில் பரிவார் ஆதரவு தலைவர்கள் திட்டவட்டமாக உள்ளனர்.
பரிவாருடன் தீவிர மோதலுக்கு வழி வகுத்துவிடாத வகையில், அத்வானிக்கும், ஆர்எஸ்எஸ், விஎச்பிக்கு ஆதரவாகவே புதியதீர்மானம் இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக இன்றும் அக்கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடக்கிறது.
இதற்கிடையே விஎச்பியின் அகில இந்தியத் தலைவர் பிரவீண் தொகாடியா, அத்வானியை மிகக் கேவலமாக விமர்சித்ததற்கு தான்மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாக அந்த அமைப்பின் மூத்த தலைவரான கிரிராஜ் கிஷோர் கூறியுள்ளார்.
இந்த மன்னிப்பு கோரலையை காரணமாக வைத்து அத்வானியின் ராஜினாமாவை திரும்பப் பெறச் செய்யலாம் என்று பாஜககருதுகிறது. அதே போல அத்வானி விஷயத்தில் ஆர்எஸ்எஸ் முழுவதுமாக இறங்கி வந்துவிட்டது.
ராஜினாமா செய்யும் அளவுக்கு அத்வானி ஏதும் பேசிவிடவில்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications