சென்னயிலும் மினி பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் சிற்றுந்துகளை (மினி பஸ்) இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைத் தவிர மற்ற மாவட்டங்களில் சிற்றுந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. கடந்த திமுக ஆட்சியின் போது இந்த மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுவரை பஸ்களையே பாரத்திராத குக்கிராமங்களுக்கும் இந்த மினி பஸ்கள் சென்று வந்ததால் இத்திட்டம் மக்களிடையே நல்லவரவேற்பை பெற்றது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு உழவர் சந்தை திட்டத்திற்கு மூடுவிழா நடத்த முயன்றதைப் போல மினி பஸ் திட்டத்தையும்ஓரங்கட்ட முயற்சிகள் நடந்தன. ஆனால் மக்களின் அமோக வரவேற்பின் காரணமாக அதிமுக அரசால் ஒன்றும் செய்யஇயலவில்லை.

இதனால் மஞ்சள் நிறத்தில் ஓடிக் கொண்டிருந்த மினி பஸ்களின் நிறத்தை பச்சை நிறமாக்கி தனது ஆதங்கத்தை அதிமுக அரசுதீர்த்துக் கொண்டது.

இந் நிலையில் சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் சிற்றுந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது.

முதல் கட்டமாக 3 வழித் தடங்களில் சிற்றுந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. பூந்தமல்லி முதல் கோயம்பேடு புறநகர்ப்பேருந்து நிலையம் வரை ஒரு தடத்திலும், கிழக்குக் கடற்கரைச் சாலையின் தெற்குப் பகுதியில் இருந்து திருவான்மியூர் பேருந்துநிலையம் வரையில் ஒரு தடத்திலும், பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து திருவான்மியூர் பஸ் நிலையம் வரை ஒரு தடத்திலும்சிற்றுந்துகள் இயக்கப்படும்.

இந்தத் தடங்களில் 500 சிற்றுந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும். சென்னையின் மற்ற புறநகர்ப் பகுதிகளிலும் படிப்படியாகசிற்றுந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

புறநகர்ப் பகுதிகளில் அரசு பேருந்து வசதி இல்லாத பல இடங்களுக்கு சிற்றுந்துகளின் காரணமாக பெரும் நிவாரணம் கிடைக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மதுரை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் தற்போது இயக்கப்பட்டு வரும் 250 சிற்றுந்துகளுடன் கூடுதலாக 100சிற்றுந்துகளை இயக்க அரசு அனுமதி அளிக்கவுள்ளது.

விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் தற்போதுள்ள 250 சிற்றுந்துகள் என்றஎண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் சிற்றுந்துகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும்இருக்காது.

இதேபோல, சிற்றுந்துகளின் எல்லைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 20 கிலோமீட்டர் தொலைவு வரை சிற்றுந்துகள் செல்லஅனுமதிக்கப்படுகிறது. இதை 25 கிலோமீட்டராக அரசு உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே போக்குவரத்துத் துறையில் புதிதாக தனியாரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.இப்போது புதிதாக மினி பஸ்களுக்கு அனுமதி வழங்குவதற்கு வசதியாக நீதிமன்ற தடையை நீக்குவதற்கான முயற்சியில் அரசுஈடுபட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+