ராஜினாமாவை வாபஸ் பெற்றார் அத்வானி
டெல்லி:
பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த அத்வானி, தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார். இதையடுத்து 4 நாட்கள்நடந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
தலைவர் பதவியைப் பிடிக்க அவரது பரம வைரியான முரளி மனோகர் ஜோஷி முயன்றதால், தனது ராஜினாமா முடிவை அத்வானிதிரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக தலைவர் பதவியைப் பிடிக்க கட்சிக்கும் பெரும் போட்டி உருவானது. தனது ஆதரவாளர்களான நாயுடு அல்லதுஜஸ்வந்த் சிங்கை தலைவர் பதவியில் அமர்த்த அத்வானி திட்டமிட்டார். ஆனால், சங் பரிவார் உதவியுடன் பதவியைப் பிடிக்கஜோஷி முயன்றார்.
பாஜக தலைவர் பதவியை நீண்ட காலமாகவே குறி வைத்திருக்கும் முரளி மனோகர் ஜோஷி இம் முறை அதை அடைவதில்தீவிரமாகக் களம் இறங்கினார். ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள், சிவ சேனை உள்ளிட்ட சங் பரிவாரங்களுக்கு மிகவும்வேண்டியவரான ஜோஷி, அவர்களது ஆதரவைத் திரட்ட ஆரம்பித்தார்.
அதற்கு முன்னோட்டமாக, ஜின்னாவைத் தாக்கியும் அவரை அத்வானி புகழ்ந்து பேசியது தவறு என்று கருத்து தெரிவித்தார்ஜோஷி.
இந் நிலையில் 9ம் தேதி நடப்பதாக இருந்த பாஜக உயர் மட்டக் கமிட்டிக் கூட்டம், அத்வானியின் வலியுறுத்தலின்படி நேற்றைக்குதள்ளி வைக்கப்பட்டது
இதனால் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், மற்றும்முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அத்வானி தனது ராஜினாமாமுடிவை வாபஸ் பெறுவதாக கூறினார்.
இந்த தகவலை ஆட்சி மன்றக்குழு கூட்டத்திற்கு பிறகு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பிரமோத் மகாஜன்தெரிவித்தார்.
மேலும் இக் கூட்டத்தில் ஜின்னாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications