ஜெயேந்திரரிடம் போலீஸ் விசாரணை: மீண்டும் கலவைக்கே "பேக்-அப்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நேற்று மாலை தனிப்படை போலீஸார் திடீரென ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஜெயேந்திரர் மீண்டும் நாளை கலவைக்கே சென்றுவிட முடிவு செய்துள்ளார்.
போலீசாரின் மிரட்டலையடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. ஜெயேந்திரருடன் விஜயேந்திரரும்காஞ்சியை விட்டு கிளம்புகிறார்.
இந் நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பவானீஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் மோகன வேல்,சமுத்திரக் கனி தலைமையில் தனிப்படை போலீஸார் காஞ்சி சங்கரமடத்திற்கு வந்தனர்.
மடத்தின் உள்ளே சென்ற தனிப்படை போலீஸார், ஜெயேந்திரரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சுமார்30 நிமிடங்கள் இந்த விசாரணை நடந்தது.
இதன் பிறகு வெளியே வந்த தனிப்படை போலீஸாரிடம் ஜெயேந்திரரிடம் நடைபெற்ற இந்த திடீர் விசாரணை குறித்துகேட்டபோது, ஜெயேந்திரர் மீது சில மோசடி வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தினோம் என்றனர்.
என்ன மோசடி வழக்கு என்று கேட்டதற்கு அவர்கள் பதில் கூற மறுத்து விட்டனர்.
ஜனகல்யாண் டிரஸ்ட் மூலம் நிலம் வாங்கி விற்றது தொடர்பாக மோசடி நடந்ததாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தவிசாரணை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திடீர் விசாரணை குறித்து காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீகார்யம் செல்லப்பாவிடம் கேட்டபோது விசாரணை குறித்து தனக்குஒன்றும் தெரியாது என்றார். இரு சங்கராச்சாரியார்களும் நாளை (சனிக்கிழமை) கலவை சங்கரமடத்திற்குசெல்லப்போவதாகவும், காஞ்சி மடத்திற்கும், கலவை மடத்திற்கும் அடிக்கடி சென்று வருவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே காஞ்சி சங்கரமடத்திற்கு மீண்டும் போலீஸார் வந்து ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்திய விவகாரம்காஞ்சிபுரத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயேந்திரரை மீண்டும் கைது செய்யப்போவதாக மக்கள் பரபரப்பாகபேசிக்கொண்டனர். இதனால் மடத்தின் முன்பு பெரும் கூட்டம் கூடிவிட்டது.
ஜெயேந்திரர் கைது செய்யப்படவில்லை என்பது தெரிந்த பிறகே அனைவரும் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே இன்று காலை ஜெயேந்திரர் சென்னை பூந்தமல்லியிலுள்ள ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். நேற்று மாலை வேலூர் அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கும் ஜெயேந்திரர் சென்று வந்தார். இந்தக் கோவிலில்இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கிடையே ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் நாளை மீண்டும் கலவை புறப்பட்டு செல்லப்போவதாக காஞ்சி சங்கரமடநிர்வாகிகள் இன்று தெரிவித்தனர். காஞ்சியில் தங்கினால் மீண்டும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இவர்கள்கலவைக்குச் சென்றுவிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாஜக கண்டனம்:
ஜெயேந்திரரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழக பாஜ பொதுச் செயலாளர்எச்.ராஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1993ம் ஆண்டு தேவேந்திரன் என்ற தனி நபர் தொடர்பான வழக்கைபயன்படுத்தி, அனுஷ்டானத்திற்குள் (சங்கர மடம்) அத்துமீறி வீடியோ கேமராவுடன் நுழைந்து பெண் டி.எஸ்.பி. அராஜகமாகநடந்து கொண்டது கண்டனத்துக்குரியது.
சங்கராச்சாரியார்கள் இருவரும் காஞ்சிக்குத் திரும்பியதை சகித்துக் கொள்ள முடியாமல் சங்கர மட பக்தர்களை அச்சுறுத்தும்வகையில் இவ்வாறு போலீஸார் நடந்து கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார் ராஜா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications