வாக்காளர் பட்டியல்: தொண்டர்களுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை:
தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ள வருகிற 20ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியில் தமிழகம்முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
ஆரம்பத்திலேயே ஜனநாயகத்தின் வேர்களை வெட்டி எறிந்துள்ளனர் என்பதை எதிர்க்கட்சிகளின் கூட்டணியினர் தக்க சமயத்தில்எடுத்துக் காட்டி, கடிதங்கள் மூலமும், நேரடியாகவும் தலைமைத் தேர்தல் ஆணையப் பிரதிநிதிகளிடம் விவாதித்ததனர்.
இதன் விளைவாக, தலைமைத் தேர்தல் ஆணையம் சற்றும் தாமதமின்றி தமிழகத்திற்கு ஆணையத்தின் பிரதிநிதிகளை அனுப்பி,அவர்கள் நடத்திய விசாரணையில் வாக்காளர் சேர்க்கும் பணியில் ஆளும் கட்சியான அதிமுகவினர் நடத்தியுள்ள அதிபயங்கரமான மோசடிகளைக் கண்டுபிடித்தனர்.
அதன் விளைவாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஓர் விபர அறிக்கையை வெளியிட்டு, அதில் காட்டப்பட்டுள்ள குறிப்புகளின்படி அனைத்துக் கட்சிகளும் பணியாற்றி வாக்காளர் பட்டியலை ஜனநாயக ரீதியாகவும், நேர்மையான முறையிலும்முழுமைப்படுத்தி வெளியிடுவதற்கேற்ப கால அவகாசம் வருகிற 20ம் தேதி வரை தரப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி அந்தக் கால அவகாசத்திற்குள் கடும் பணியாற்றி, எல்லாப் பகுதிகளிலும் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து ஒழுங்குபடுத்திட வேண்டுமென்று திமுக மற்றும் தோழமைக் கட்சித் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆளுங்கட்சியினரால் அதிகாரிகள் சிலரது ஒத்துழைப்புடன் ஆங்காங்கு நடைபெற்றுள்ள இந்த வாக்காளர் பட்டியல் மோசடி,"பெண் சிசுக்களின்" கொலைக்கு சமமானது என்பதை, மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்தோர் கருதிட வேண்டுமென்று சுட்டிக்காட்டுவதுடன் அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை ஆணையம் அறிவித்துள்ளவாறு உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
ரேஷன் அரிசி விலை:
கடந்த 7ம் தேதி நடந்த தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவின்படி, சாலைப்பணியாளர்கள் பத்தாயிரம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டு அவர்களில் இதுவரையில் 60க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைசெய்து கொண்டு மாண்டிருக்கிற கொடுமையை எடுத்துக் காட்டியுங் கூட, ஜெயலலிதா அரசு அவர்களுக்கு பணி வாய்ப்புஅளிக்கவில்லை.
இதைக் கண்டித்து ஜூன் 15ம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு அனைத்துக் கட்சியினர்ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டதோடு, ரேஷன் கடைகளில் எல்லா அத்தியாவசியப் பொருட்களும்கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
15ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் போது சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்க வலியுறுத்துவதோடு,ரேஷன் கடை மூலம் விநியோகிக்கப்படும் அரிசி விலையை, கிலோ ரூ. 3.50லிருந்து 2 ரூபாயாகக் குறைக்க வேண்டுமென்றும்இந்த அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications