தா.கி. கொலை வழக்குக்கு இடைக்காலத் தடை
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை மதுரை நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றக் கிளை தடைவிதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டுள்ளது.
அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி, மிகுந்த செல்வாக்கு உள்ளவர். அவர் விசாரணைக்காகநீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம் மிகப் பெரிய கூட்டம் கூடவே வருகிறது. இதில் சிலர் தங்களை வக்கீல்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.
அரசு வழக்கறிஞரையும் சரியாக பேச விடாமல் அவர்கள் கோஷமிடுகிறார்கள். சாட்சிகள் சிலருக்கும், தா.கிருட்டிணன் சகோதரர்ராமையாவுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. நீதிபதிக்கும் கூட மிரட்டல்கள் வந்துள்ளன.
வேறு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று விசாரணை நீதிபதியே கோரியுள்ளார். இதுதொடர்பாகஉயர்நீதிமன்ற பதிவாளர், மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஆகியோருக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் இப்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு தானே விசாரிப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் இந்த வழக்கை வேறுநீதிமன்றத்திற்கு மாற்றுவதே நல்லது என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மாசிலாமணி, தா.கி. கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகவும், விசாரணநீதிபதி எழுதியதாக கூறப்படும் கடிதங்களை உயர்நீதிமன்றக் கிளையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், அழகிரி உள்ளிட்ட 13 பேருக்கும் வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றுவது குறித்து விளக்கம் தருமாறு கூறி நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications