2 தமிழ்த் தீவிரவாதிகள் கைது: கொள்ளைச் சம்பவம் தடுப்பு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

நகைக் கடையில் கொள்ளை அடிக்கும் முயற்சியுடன் நடமாடிய தமிழர் விடுதலைப் படை தீவிரவாதிகள் இருவரை போலீஸார்மடக்கிப் பிடித்தனர்.

தமிழர் விடுதலைப் படை தலைவராக இருந்த தமிழரசன், சில காலத்திற்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் பொன்பரப்பிபகுதியில் பொதுமக்களால் தாக்கப்பட்டு இறந்தார். அவருக்குப் பின்னர் கருணாகரன் என்ற தென் தமிழன் என்பவர் இந்தஇயக்கத்தை நடத்தி வருகிறார்.

கடந்த 1986ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்ப்பதற்காக மருதையாற்று பாலத்தில்வெடிகுண்டை வெடிக்கச் செய்த வழக்கில் கருணாகரன் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட கருணாகரன் சமீபத்தில் பரோலில் விடுதலையானார். பின்னர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தனர். அதுதொடர்பாகவும் ஒரு வழக்கு கருணாகரன் மீதுஉள்ளது.

திருச்சி சிறையில் இருக்கும்போது கருணாகரன், தமிழர் மக்கள் விடுதலை இயக்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கினார்.சிறையிலிருந்தபடியே அதை நடத்தி வந்துள்ளார். சிறையில் இருக்கும்போது இளங்கோவன் என்பவரின் நட்பு கிடைத்தது.

தனது இயக்கத்திற்கு இளங்கோவன் உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார் கருணாகரன். அதற்கு இளங்கோவனும்சம்மதித்துள்ளார். போராட்டத்திற்குத் தேவையான நிதியை திரட்ட கொள்ளை அடிக்க கருணாகரன் திட்டம் தீட்டியுள்ளார்.

இந் நிலையில், சிறையிலிருந்து விடுதலையான இளங்கோவன், இலங்கை அகதியான யோகராஜா என்ற அய்யாவு,சரவணக்குமார் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளைத் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

முதல் கட்டமாக இளங்கோவன் ஒரு நாட்டுத் துப்பாக்கியையும், 6 தோட்டாக்களையும் வாங்கி சரவணக்குமார், யோகராஜாவிடம்கொடுத்துள்ளார். தஞ்சையில் கொள்ளை அடிக்க வேண்டிய இடத்தை முடிவு செய்து விட்டு தான் சொன்னதும்புறப்பட்டுவருமாறு அவர்களிடம் கூறி விட்டு தஞ்சைக்கு சென்று விட்டார் இளங்கோவன்.

பின்னர் அங்கிருந்தபடியே, போன் மூலம் சரவணக்குமார், யோகராஜாவைக் கிளம்பி வருமாறு அவர் கூறியுள்ளார். அதன்படிமோட்டார் சைக்கிளில் இருவரும் கிளம்பியுள்ளனர். கியூ பிரிவு போலீஸாருக்கு இதுகுறித்துத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பண்டாரவடை என்ற இடத்தில் போலீஸார் மறைவிடத்தில் காத்திருந்தனர். அப்போது யோகராஜா, சரவணக்குமார்இருவரும் வந்தனர். இருவரையும் துப்பாக்கி முனையில் போலீஸார் மடக்கிப் பிடித்து சோதனை போட்டனர்.

அவர்களிடமிருந்து துப்பாக்கி, 5 தோட்டாக்கள், ஒரு வெற்றுத் தோட்டா ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து கைதுசெய்தனர். தலைமறைவாகி விட்ட இளங்கோவனுக்கு வலை வீசப்பட்டுள்ளது. இவர்களைக் கைது செய்ததன் மூலம் பெரும்கொள்ளைச் சம்பவம் தடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+