விசா, பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்துகிறது இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

விசா மற்றும் பாஸ்போர்ட் கட்டணங்களை உயர்த்த இங்கிலாந்து தீர்மானித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல்அமலுக்கு வருகிறது.

விசா மற்றும் பாஸ்போர்ட் கட்டணங்களை உயர்த்த இங்கிலாந்து தீர்மானித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல்அமலுக்கு வருகிறது.

இந்தியாவிலிருந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக இங்கிலாந்து செல்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும்அதிகரித்து வருகிறது. இந் நிலையில் இங்கிலாந்து அரசு, விசா மற்றும் பாஸ்போர்ட் கட்டணங்களை உயர்த்த தீர்மானித்துள்ளது.

6 மாத சுற்றுலா விசாவுக்கான கட்டணம் ரூ.2,880லிருந்து ரூ.4000 ஆக உயர்த்தப்படுகிறது. 6 மாதங்களுக்கு அதிகமாகதங்குபவர்கள் மற்றும் மாணவர்கள் விசாவுக்கான கட்டணம் ரூ.6800 ஆக உயர்த்தப்படுகிறது.

குடியேற்ற விசா கட்டணத்தில் மாற்றமில்லை (ரூ.20,800). 10 வருடங்கள் வரை தங்கும் சுற்றுலா விசாவுக்கான கட்டணம்ரூ.12,000 ஆக குறைக்கப்படுகிறது. இதே போல 5 வருடங்கள் வரை தங்கும் சுற்றுலா விசா கட்டணமும் 6,800 ஆககுறைக்கப்படுகிறது.

இதே போல பாஸ்போர்ட் கட்டணத்தையும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 32 பக்க பெரியவர்களுக்கான பாஸ்போர்ட்கட்டணம் ரூ.4,900லிருந்து ரூ.5340 ஆக உயர்த்தப்படுகிறது. 48 பக்க பெரியவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம்ரூ.5440லிருந்து 6,560 ஆக உயர்த்தப்படுகிறது.

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கட்டணம் ரூ.2,820லிருந்து ரூ.3,600 ஆகவும், உடனடி பாஸ்போர்ட்டுக்கான கட்டணம்ரூ.2,720லிருந்து ரூ.3,520 ஆகவும், தற்காலிக பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.3,680லிருந்து ரூ.4,400 ஆகவும், பிறப்பு மற்றும்இறப்பை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.4,400லிருந்து ரூ.5,200 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

கடந்த 2004-05ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு 4,82,000 பாஸ்போர்ட்டுகளை வழங்கியுள்ளது. இது தவிர 6,500 அவசரபாஸபோர்ட்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+