ஜெயேந்திரர் மீண்டும் கலவை திரும்பினார்
காஞ்சிபுரம்:
போலீஸாரின் மிரட்டலைத் தொடர்ந்து ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இன்று காலையே மீண்டும் கலவைக்கு திரும்பினர்.
ஜெயேந்திரர் காஞ்சிக்கு திரும்பிய மறுநாளே (9ம் தேதி) கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பவானீஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் மோகனவேல், சமுத்திரக் கனி தலைமையில் தனிப்படை போலீஸார் காஞ்சி சங்கரமடத்திற்கு வந்தனர்.
மடத்தின் உள்ளே சென்ற தனிப்படை போலீஸார், ஜெயேந்திரரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சுமார்30 நிமிடங்கள் இந்த விசாரணை நடந்தது.
இதன் பிறகு வெளியே வந்த தனிப்படை போலீஸாரிடம் ஜெயேந்திரரிடம் நடைபெற்ற இந்த திடீர் விசாரணை குறித்துகேட்டபோது, ஜெயேந்திரர் மீது சில மோசடி வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தியதாக கூறினர்.
ஜனகல்யாண் டிரஸ்ட் மூலம் நிலம் வாங்கி விற்றது தொடர்பாக மோசடி நடந்ததாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தவிசாரணை நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வருவோம் என்று போலீஸர்கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.
காஞ்சி சங்கரமடத்திற்கு மீண்டும் போலீஸார் வந்து ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்திய விவகாரம் காஞ்சிபுரத்தில் பரபரப்பைஏற்படுத்தியது.
இதற்கிடையே ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் மீண்டும் கலவை புறப்பட்டு செல்லப்போவதாக காஞ்சி சங்கரமடநிர்வாகிகள் நேற்று தெரிவித்தனர்.
இதன்படி இன்று அதிகாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் மடத்திலிருந்து ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் வேனில் கலவைக்குபுறப்பட்டனர். தங்களுடன் சந்திரமெளலீஸ்வரர் விக்கிரகம் மற்றும் பூஜைப் பொருரட்களையும் அவர்கள் எடுத்துச் சென்றனர்.
சங்கராச்சாரியார்கள் இருவரும் மீண்டும் கலவைக்கு திரும்பியது குறித்து காஞ்சி சங்கரமடம் சார்பில் எதுவும்தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் எப்போது காஞ்சிக்கு திரும்புவார்கள் என்பது குறித்தும் அறிவிப்பு எதுவும்வெளியிடப்படவில்லை.
காஞ்சியில் தங்கினால் மீண்டும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இவர்கள் மீண்டும் கலவைக்குச்சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே கலவை மடத்திற்கு திரும்பிய உடன் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் வழக்கம் போல பூஜைகளை நடத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications