ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு சாத்தியமில்லை
சேலம்:
மேட்டூர் அணையிலிருந்து வருகிற 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என பொதுப் பணித்துறைவட்டாரத்தில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணையில் தண்ணீர் இருப்பு இல்லாதது, கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் வராதது உள்ளிட்ட காரணங்களால் அணை திறப்புமுறைப்படி நடக்கவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படுவதற்கான சூழ்நிலை இல்லை. மேட்டூர் அணையின்மொத்த நீர் இருப்பு 120 அடியாகும். ஆனால் அணையில் தற்போது 54 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையைத் திறக்கவேண்டுமானால் குறைந்தது 90 அடி தண்ணீர் இருக்க வேண்டும்.
ஆனால் 54 அடி தண்ணீரே இருப்பதால், இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி அணையைத் திறக்க முடியாத நிலை இருப்பதாகபொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை பெய்ய வேண்டும் அல்லது கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வரவேண்டும். அப்படி நடந்தால் தான் மேட்டூர் அணையைத் திறக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கர்நாடகத்திடமிருந்து உரிய நீரைப் பெறதமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி காவிரிப் பாசனப் பகுதியில் ஏற்கனவே ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications