இடம் தர மறுக்கும் பள்ளிகள்: அவதிப்படும் வீரப்பனின் மகள்கள்
சென்னை:
வீரப்பனின் 2 மகள்களுக்கும் பள்ளியில் படிக்க அனுமதி மறுக்கப்படுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி கூறுகிறார்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இவர்கள் இருவரும் தங்களது பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாமல்வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு இறுதித் தேர்வில் வித்யா ராணி, பிரபா ஆகிய இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தவருடம் இவர்கள் இருவரும் 9 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் எந்தப் பள்ளியிலும் இவர்களை சேர்க்க மறுக்கிறார்களாம். வீரப்பனின் மகள்கள் என்று தெரிந்ததும் பயந்து போய்அப்படியே பொட்டியைக் கட்டச் சொல்லிவிடுகிறார்கள்.
இது குறித்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறுகையில், என்னுடைய 2 மகள்களையும் படிக்க வைக்க நான் போராடிக்கொண்டிருக்கிறேன். திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல பள்ளிகளுக்கு சென்று நான் எனது மகள்களைசேர்த்துக் கொள்ளுமாறு கூறினேன்.
ஆனால் வீரப்பனின் மகள்கள் என்று தெரிந்த உடன் பள்ளிகளில் சேர்க்க பயப்படுகிறார்கள். என்னுடைய மகள்களை சேர்த்தால்போலீஸார் தொந்தரவு செய்வார்கள் என்று நினைத்து தயவு செய்து இந்த இடத்தை விட்டு போய் விடுங்கள் என்று கூறுகின்றனர்.யாருக்குமே மனிதாபிமானம் இல்லை.
என்னுடைய மகள்களை பள்ளியில் சேர்க்க உதவுமாறு பல அரசியல்வாதிகளிடமும் நான் உதவி கேட்டேன். ஆனால் முதலில்உதவுவதாக கூறிவிட்டு பிறகு வழக்கம் போல நழுவி விட்டார்கள்.
என் கணவர் செய்த பாவத்துக்காக இந்த அப்பாவி குழந்தைகள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். எல்லோரும் எங்களைவெறுத்து ஒதுக்குகிறார்கள்.
என்னுடைய கணவர் உயிருடன் இருந்த போது போலீஸார் கொடுத்த தொந்தரவுக்கு பயந்து நான் எனது மகள்களைபிரிந்திருந்தேன். இப்போது தான் நான் எனது மகள்களுடன் சேர்ந்திருக்கிறேன். இனியாவது எங்களை இந்த உலகம் நிம்மதியாகவாழ விடக்கூடாதா?
இருவரும் கான்வென்டில் ஹிந்தியை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்ததால் தமிழில் எழுதவோ, படிக்கவோ தெரியாது. இதுதான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது. என்னுடைய மகள்களின் எதிர்காலத்திற்கு நல்ல மனது படைத்தவர்கள் உதவவேண்டும் என்றார்.
வீரப்பன் தன்னுடைய மூத்த மகள் வித்யா ராணியை ஐஏஎஸ் படிக்க வைக்கவும், 2வது மகள் பிரபாவை கம்ப்யூட்டர்என்ஜினியராக்கவும் ஆசைப்பட்டானாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications