சென்னையில் கோர விபத்து: 2 மாணவர்கள் பலி
சென்னை:
கிழக்குக் கடற்கரைச் சாலையில், மாமல்லபுரம் அருகே அரசு விரைவுப் பேருந்து மீது கார் மோதியதில், காரில் பயணம் செய்த புதுவை மருத்துவக் கல்லூரி மாணவர்மற்றும் மாணவி இருவர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ஆனந்த், புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூயில் இலங்கையைச்சேர்ந்த அம்மு என்ற மாணவியும் படித்து வந்தார்.
அப்போது தனக்கு முன்பாக சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல ஆனந்த் எத்தனித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக எதிரே அரசு விரைவுப் பேருந்துவந்து விடவே, கார், பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்குப் போராடிய அம்முவை அப்பல்லோ மருத்துவமனைக்குஎடுத்துச் சென்றனர். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அம்மு இறந்து விட்டார்.
இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரைச் சாலையின் பல இடங்களில் சாலையின் நடுவே தடுப்புகள் இல்லை. இதனால் அதி வேகமாக வாகனங்கள் செல்வதும், ஓவர் டேக் செய்வதும்சகஜமான ஒன்று. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால், கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications