ராணி மேரி கல்லூரி: ஸ்டாலின் மீதான வழக்கு நாளை விசாரணை
சென்னை:
ராணி மேரி கல்லூரி விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை தொடங்குகிறது.
சென்னை ராணி மேரிக் கல்லூரியை இடிக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து அக் கல்லூரி மாணவிகள் கடந்த 2003ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அக்கல்லூரிக்குச் சென்ற திமுக பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
அப்போது தங்களது பணியை செய்ய விடாமல் தடுத்தும், கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறி ஸ்டாலின் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஒரு போலீஸ் வாகனம் தாக்கப்பட்டதாகவும் போலீஸார் கூறினார்கள்.
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின் அவர் 21ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஏற்கனவே சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை (10ம் தேதி) நீதிபதி முருகேசன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் டி.வி.கணேஷ் ஆஜரானார். பின்னர்விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு ஸ்டாலின் உட்பட 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகசம்மன் அனுப்பப்படும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications