மின் உற்பத்தி: கல்பாக்கம் அணு மின் நிலையம் உலக சாதனை
சென்னை:
பயன்படுத்தப்பட்ட புளுடோனியம், கார்பைடு ஆகியவற்றைக் கொண்டு, மறு சுழற்சி முறையில் 50 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரித்து கல்பாக்கம் அணு மின் நிலையம்உலக சாதனை படைத்துள்ளது.
அணு மின் உலைகளில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் புளுடோனியம் மோனா கார்பைட், யுரேனியம் போன்ற எரிபொருட்களில் குறிப்பிட்ட சதம் அளவே எரியும்.மீதமுள்ளவை அப்படியே வீணாகி விடும்.
இதைத் தொடர்ந்து கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் மறு சுழற்சி முறையில் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவேபயன்படுத்தப்பட்ட யுரேனியம், புளுட்டோனியம் மோனோ கார்பைட் ஆகியவை கடந்த 2002ம் ஆண்டிலிருந்து சேமித்து வைக்கப்பட்டு வந்தது.
இதிலிருந்து அணுக் கதிர் வீச்சு நீங்கி குளிர் நிலையை அடைந்தவுடன் மறு சுழற்சி முறையில் இவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இப்படியாக 50 லட்சம்யூனிட் மின்சாரம் வரை தயாரித்து கல்பாக்கம் அணு மின் நிலையம் பெரும் சாதனை படைத்துள்ளது. இது ஒரு உலக சாதனையாகும்.
உலகில் வேறு எங்குமே இப்படி மறு சுழற்சி முறையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டதில்லை. உலகிலேயே முதல் முறையாக கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் தான் மறுசுழற்சி முறையில், மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனைச் செய்தியை இந்திய அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் பேசுகையில், எரிபொருள்குளிர் நிலை காலத்தை 2 ஆண்டுகளிலிருந்து 8 மாதமாக குறைக்க தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் இன்னும் அதிக அளவில் மின்சாரம் தயாக்கமுடியும்.
கல்பாக்கத்தில் சாதனை நிகழ்த்திய மறு சுழற்சி எரிபொருள் தொழில்நுட்பம் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகும். கல்பாக்கம் விஞ்ஞானிகள் பெரும் சாதனைபடைத்துள்ளனர்.
கடந்த 1965ம் ஆண்டு இந்த மறு சுழற்சி எரிபொருள் உபயோக முறை தொடங்கியது. டிராம்பே அணு மின் நிலையத்தில் இந்த ஆய்வுகள் தொடங்கின. ஆனால்கல்பாக்கத்தில் தான் இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா நிகழ்த்தியுள்ள இந்த சாதனை, மிகப் பெரிய தொழில் நுட்ப சவாலுக்கு விடை கண்டுள்ளது. உலக அளவில் இது மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்ககோத்கர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications